Latestமலேசியா

விபத்தில் லாரி ஓட்டுநர் மரணம்; 7 போலீஸ் அதிகாரிகள் படுகாயம்

கோலாலம்பூர், செப் 23 – நெகிரி செம்பிலான், Rembau – வில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 225-வது கிலோமீட்டரில் நான்கு வாகனங்களை உட்படுத்திய விபத்தில், லாரி ஓட்டுநர் உயிரிழந்த வேளை, 7 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.

நேற்று மாலை மணி 3.40 -க்கு நிகழ்ந்த அந்த விபத்து, வட ஜோகூர் பாரு நிலையத்தைச் சேர்ந்த போலீசாரை ஏற்றியிருந்த வேனையும், ஒரு லாரியையும், மேலும் இரு வாகனங்களையும் உட்படுத்தி இருந்தது.

இவ்வேளையில், அவ்விபத்தில் காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, Rembau போலீஸ் தலைவர் Hazri Mohamad தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!