Latestமலேசியா

விபத்தில் 2 வயது குழந்தை உட்பட மூவர் மரணம்

தங்காக், செப் 11 – ஜோகூரில் தங்காக்கிற்கு அருகே ஜாலான் மூவார் – சிகமாட் சாலையின் 44. 5-ஆவது கிலோமீட்டரில் மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முவர் உயிரிழந்தனர் என தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடண்டன் பாடில் மின்ஹாட் தெரிவித்தார். தக்காக்கிலிருந்து சிகமாட்டிற்கு சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த மற்றொரு காருடன் மோதி கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு காருடன் மோதியது. இந்த விபத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை தங்காக் மருத்துவமனையில் இறந்தது, அந்த குழந்தையின் 36 வயது தாயார் மற்றும் 71 வயது பாட்டி விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தனர். அந்த குழந்தையின் 34 வயது தந்தை காயம் அடைந்ததைத் தொடர்ந்து தங்காக் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார், இதர இரண்டு கார்களைக் சேர்ந்த மூவர் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!