
கம்பார், ஏப் 24 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 291. 3ஆவது கிலோமீட்டரில் ஒரு தம்பதியரும் அவரது குழந்தையும் சென்ற மைவி புரோடுவா காரின் பின்னால் மற்றொரு கார் மோதியது. அந்த விபத்தை தொடர்ந்து அவர்களது கார் சாலையிலிருந்து வெளியேறி கவிழ்ந்தபோது காரின் இருக்கையிலிருந்து இரண்டு வயது குழந்தை வெளியே விழுந்போதிலும் பெரிய காயம் எதுவுமின்றி அக்குழந்தை உயிர் தப்பியது. எனினும் அக்காரின் முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த 34 வயது Norfadilah Ismail இறந்தார். அந்த காரை ஓட்டிய அப்பெண்ணின் கணவர் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். இதனிடையே அவர்களது காரை மோதிய மற்றொரு மைவி காரில் இருந்த நான்கு ராணுவ வீரர்களும் காயம் அடையவில்லை என கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடென்டன் Mohd Nazri Daud தெரிவித்தார்.