
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், மெனோரா சுரங்கப் பாதைக்கு அருகில், மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தால், வட மாநிலங்களை நோக்கி செல்லும் பாதையில் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாலை மணி 5.11 வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்து, லோரி, Trailer மற்றும் மைவி காரையும் உட்படுத்தி இருந்தது.
எனினும், அவ்விபத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை, மேரு ராயா தீயணைப்பு மீட்புப் படை தலைவர் முஹமட் ஹலில் தெரிவித்தார்.
விபத்க்துக்குள்ளான லோரியில் சிக்கிக் கொண்டிருந்த ஓட்டுனர் பாதுகாப்பாக மீட்கபட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, மாலை மணி 6.22 வாக்கில், அந்த நெடுஞ்சாலையின் இடது பாதை போக்குவரத்துக்கு மூடப்பட்டிருப்பட்டிருப்பதாகவும், பயணிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறும் Plustrafik ட்விட்டரில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.