
பஹாங், ஜாலான் குவந்தான் – மாரானில் நிகழ்ந்த விபத்துக்கு காரணமாக லோரி ஓட்டுனருக்கு போலீஸ் அபராதம் விதித்தது.
அந்த விபத்து தொடர்பான காணொளி நேற்று சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நேற்று மாலை மணி 3.05 வாக்கில், லோரியையும், காரையும் உட்படுத்திய விபத்து ஒன்று தொடர்பில், சம்பந்தப்பட்ட இரு தரப்பும் போலீஸ் புகார் செய்ததை, குவந்தான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் வான் முஹமட் ஜஹாரி வான் புசு உறுதிப்படுத்தினார்.
அவ்விபத்து குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்ட வேளை ; வைரலான காணொளி வாயிலாக, லோரி ஓட்டுனரின் அலட்சியப் போக்கால் விபத்து நிகழ்ந்தது தெரிய வந்ததாக ஜஹாரி சொன்னார்.
அதனால், அவருக்கு போலீஸ் அபராதம் விதித்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.