
சென்னை, ஜன 25 – பிக்போஸ் இறுதி போட்டியில், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் அணிந்துவந்த சாயம் அடிக்கப்பட்ட உடை நெட்டிசன்களின் கேளிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியிருக்கிறது.
கமலஹாசன் அணியும் உடை எப்போதுமே மக்களின் கவனத்தை ஈர்க்கும். ஆனால் குறிப்பிட்ட அந்த இறுதி நிகழ்ச்சியில் அவர் அணிந்த அந்த ஆடை இறுதி போட்டியுடைய பிரமாண்டத்தை காட்டும் வகையில் இல்லை என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்துரைத்த அந்த ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா கமல்ஹாசனுக்கு அந்த சாயம் பூசப்பட்ட உடையின் வடிவமைப்பு மிகவும் பிடித்திருந்தது. அது அவரின் விருப்பத்தின்பேரிலே தயாரிக்கப்பட்டது, அதுவே எங்களுக்கு போதும் என்று கூறியிருக்கின்றார்.