Latestஉலகம்

விமானத்தின் இயந்திரத்தில் தீ 185 பயணிகளுடன் Spicejet விமானம் அவசரமாக தரையிறங்கியது

பாட்னா, ஜூன் 20 – Patna விமான நிலையத்திலிருந்து 185 பயணிகளுடன் புதுடில்லி புறப்பட்ட Spicejet விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது. பறவை மோதியதைத் தொடர்ந்து அந்த விமானத்தின் இடதுபுற இயந்திரத்தில் தீப்பிடித்தைதை விமானி உணர்ந்ததால் உடனடியாக அவ்விமானம் மீண்டும் Patna விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தரையில் இருந்த உள்ளூர் மக்கள் எடுத்த புகைப்படத்தில் அவ்விமானத்தின் இடதுபுற இயந்திரத்தில் தீ வருவதையும் காணமுடிந்தது. அந்த விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் காயம் எதுவுமின்றி பாதுகாப்புடன் தரையிறங்கினர். பறவை நேரடியாக விமானத்தின் இடதுபுற இயந்திரத்தில் மோதியதால் அந்த விமானத்தின் காற்றாடியின் மூன்று கத்திகள் பாதிக்கப்பட்டதாக SpiceJet நிறுவனத்தின் விமான நடவடிக்கை பிரிவின் தலைவர் கேப்டன் Gurcharan Arora தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!