கோலாலம்பூர், பிப் 16 – சுயமாக சூடாக்கி உண்ணக் கூடிய உணவும் பொருளை, Malaysia Airlines விமானத்திற்குள் எடுத்துச் செல்ல , பயணிகளுக்கும், விமான பணியாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சூடாக்கி உண்ணக்கூடிய உணவு பொட்டலங்களில் ஆபத்தான பொருட்கள் கலந்திருப்பதால் , பாதுகாப்பின் காரணமாக அந்த தடையை விதித்திருப்பதாக, அந்த விமான நிறுவனம் அதன் அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அந்த உணவுப் பொட்டலங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மெக்னீசியம் (magnesium) தூள், இரும்பு தூள் போன்ற ரசாயனப் பொருட்கள், எரியும் வாயுக்களை வெளியேற்றும் தன்மையைக் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.