
கோலாலம்பூர், ஆக 29 – மலேசியாவில் சாலையில் அல்லது நெடுஞ்சாலையின் மன்னர் என மைவி கார் அடிக்கடி அழைக்கப்படுவதுண்டு. தற்போது விமானத்தின் வேகத்திற்கு போட்டியிடும் முயற்சியில் மைவி ஈடுபட்டது மலேசியாவில் சிறிய காராக கருதப்படும் Myvi எதிர்பாரத விதமாக வர்த்தக விமானத்தின் வேகத்தோடு போட்டியிட்டது. விமான ஓடும் தளத்திற்கு அருகே புறப்பட்ட விமானத்தின் வேகத்திற்கு ஏற்ப மைவியும் முழு வீச்சில் வேகமாக ஓடியது. அப்போது விமானத்தின் இயந்திரம் வேகமான ஓசையுடன் புறப்படுவதற்கு தயாராகியது. அந்த விமானத்திற்கு ஈடாக மைவி காரும்வேகமாக சென்ற போதிலும் விமானத்தின் இயந்திரத்தின் வேகத்திற்கு மைவி ஈடுகொடுக்க முடியவில்லை. Aderen lim என்பவர் முகநூலில் பதிவேற்றம் செய்த இது தொடர்பான காணொளி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.