
சன் பிரான்சிஸ்கோ, மே 13 – அதிகமானோர் Youtube பார்க்க வேண்டும் என்பதற்காக தனது விமானத்தை கலிபோர்னியாவில் காட்டுப் பகுதியில் வேண்டுமென்றே விபத்தில் சிக்கவைத்து அதனை வெடிக்கச் செய்த Youtube பயணர் ஒருவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனார். அதற்கு முன்னதாகவே வான் குடை மூலம் கீழே குதித்த யுடியுப் விமானி Trevor Jacob 20 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்நோக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். எனது விமானத்தை நான் விபத்தில் சிக்க வைத்தேன் என்ற தலைப்பிலான அவரது யுடியுப் காணொளியை இதுவரை 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். விமானம் விபத்தில் சிக்கும் காட்சிகள் மற்றும் அதில் இருந்து எப்படி வான்குடை மூலம் Trevor Jacob தப்பும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென் கலிபோர்னியாவில் தனது விமானத்தின் இயந்திரம் செயல் இழந்தாக கூறி ஒரு இயந்திரம் கொண்ட விமானத்திலிருந்து வான்குடை மூலமாக அவர் உயிர்தப்பினார். இந்த சம்பவம் அனைத்தையும் Trevor Jacob செல்பி எடுத்துள்ளார்.