Latestமலேசியா

விமானப் பயணங்கள் 5 மணி நேரங்களுக்கும் மேல் தாமதமா? முழுக் கட்டணம் இனி திரும்பக் கிடைக்கும்

புத்ராஜெயா, ஆகஸ்ட்-28 – விமானப் பயணங்கள் இனி 5 மணி நேரங்கள் அல்லது அதற்கும் மேல் தாமதமானால், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும்.

தாமதமாகும் பயணத்தைத் தொடருவதில்லை என வாடிக்கையாளர்கள் முடிவுச் செய்தால், 30 நாட்களுக்குள் முழு கட்டணமும் திருப்பித் தரப்பட வேண்டும்.

வரும் திங்கட்கிழமை முதல் அது நடப்புக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று அறிவித்தார்.

பயணிகளுக்கு மேலும் சிறப்பான பாதுகாப்பை வழங்கும் நோக்கில் 2016 மலேசிய வான் போக்குவரத்துப் பயணிகள் பாதுகாப்புக் குறியீடு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்யும் போது கட்டணம் செலுத்தப்பட்ட முறையிலேயே பணத்தைத் திருப்பித் தருவதே, விமான நிறுவனங்களின் முதல் தேர்வாக இருக்க வேண்டும்.

பின்னர், மாற்றுத் தேர்வாக, பயண பற்றுச் சீட்டையோ அல்லது மான்ய விலையிலான டிக்கெட் வழங்கவோ விமான நிறுவனங்கள் முன் வரலாம்.

என்றாலும், தங்களுக்கு வேண்டிய முறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பயணிகளுக்கே உண்டு என அந்தோனி லோக் தெரிவித்தார்.

பயண அட்டவணையில் மாற்றம் இருப்பின், விமானப் புறப்பாடுக்கு முன்பு குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பே பயணிகளுக்கு அது தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

எனினும் தவிர்க்க முடியாத தொழில்நுட்பக் கோளாறுகளின் போது அதில் விலக்குண்டு.

அண்மைய காலமாகவே பல விமானப் பயணங்கள் தாமதமாவதும் ரத்தாவதும் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!