Latestமலேசியா

விமானப் பயணச் சேவை பாதிப்புக்காக பயணிகளிடம் மன்னிப்புப் கோரிய வான் போக்குவரத்துக் குழுமம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் -17, அண்மையில் Mas Airlines, Firefly விமானப் பயணச் சேவைகள் பாதிக்கப்பட்டதற்காக மலேசிய வான் போக்குவரத்து குழுமம் (MAG) வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புப் கோரியுள்ளது.

மோசமான வானிலை, தொழில்நுட்ப நெருக்கடி, ஆள்பலம், விமான கையிருப்பு பற்றாக்குறை, பெருந்தொற்றுக்கு பிந்தைய சவால்கள் உள்ளிட்ட காரணங்களால் நடப்பில் விமானச் சேவை பாதிப்புற்றிருக்கிறது.

இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது; அவற்றைக் களைய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக MAG குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ கேப்டன் இஸ்சாம் இஸ்மாயில் (Datuk Kapten Izham Ismail) அறிக்கையில் தெரிவித்தார்.

அண்மையில் சுபாங் சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்தில் Firefly விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன.

அதே சமயம், KLIA-வில் Malaysia Airlines விமானப் பயணமும் தாமதமடைந்ததாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலானது.

சில விமானப் பயணங்கள் ரத்தானதாகவும் கூறப்பட்டது.

பயணிகளின் code பகிர்வு தொடர்பிலும் சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!