
ஷா ஆலாம், ஆகஸ்ட்டு 18 – விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பகுதியிலுள்ள, சாலைகளை துப்புரவு செய்யும் பணிகளில் சிலாங்கூர் தீயணைப்பு மீட்புப் படை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதற்காக, மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், பொது தற்காப்பு படை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் இணைந்து, சாலையில் சிதறிக் கிடந்த விமானத்தின் உடைந்த பாகங்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
நேற்று லங்காவியிலிருந்து புறப்பட்ட தனியார் விமானம், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த சமயத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.