
கோலாலம்பூர், ஜன 18 – 6 ஆண்டுகளுக்கு முன்பு , 70 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிக தொகையை உட்படுத்திய விமானம், ஹெலிகப்டர் கொள்முதல் நடவடிக்கையில் மோசடி செய்ததாக டத்தோ தகுதி கொண்ட ஆடவர் மீது கோலாலம்பூர் Sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், குற்றம் சாட்டப்பட்ட நபரான 59 வயது Ismail Hassan என்பவர் தனது குற்றச்சாட்டினை மறுத்திருக்கின்றார்.
ரொக்கமாக்க முடியாது என அறிந்தும், ஏமாற்றப்பட்ட நபரிடம் இரு காசோலைகளை வழங்கியதோடு, திவாலாகியிருந்த நிலையில் கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்ததாகவும் , அந்த டத்தோ குற்றச்சாட்டினை எதிர்நோக்கியுள்ளார்.