
தென் ஆப்பிரிக்காவில், சுமார் 11 அடி ஆயிரம் உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானி அறையில் இருக்கைக்கு கீழ் தோன்றிய கொடிய நாகப்பாம்பை கண்ட விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்கியதாக கூறப்படுகிறது.
விமானம் புறப்படுவதற்கு முதல் நாள், அதில் நாகப்பாம்பு புகுவதை, விமான நிலைய பணியாளர்கள் கண்டுள்ளனர். எனினும், எவ்வளவு தேடியும் அப்பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், அந்த பாம்பு தானாகவே விமானத்தை விட்டு வெளியேறியிருக்கலாம் எனும் யூகத்தில், விமான சேவை அட்டணையிட்டபடி தொடரப்பட்டது.
நடுவானில் திடீரென தோன்றிய அந்த கொடிய நாகப்பாம்பை கண்டு அச்சமடைந்தாலும், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள் குவிழ்ந்து வருகின்றன.
சம்பவத்தின் போது விமானி உட்பட அவ்விமானத்தில் நால்வர் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.