
மாண்ட்கோமெரி , ஜன 4 – அமெரிக்கா, Alabama, Montgomery விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் இயந்திரத்தால் இழுக்கப்பட்டு , பணியாளர் ஒருவர் கொடூரமாக உயிர் விட்டிருக்கின்றார். பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய குறிப்பிட்ட விமானம் தரையிறக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பணியாளர் அந்த விமானத்தின் இயந்திரங்களில் ஒன்று இன்னும் இயங்கிக் கொண்டிருப்பதை உணரவில்லை. அதையடுத்து, எதிர்பாராமல் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக, New York Post செய்தி வெளியிட்டது. உயிரிழந்தவர் விமான நிறுவனமொன்றுக்கு வேலை செய்து வந்தது தெரிய வந்தது.