
கோலாலம்பூர், செப் 6 – மருந்துகள் என ரகப்படுத்தப்பட்ட பொட்டலங்கள் வாயிலாக 1.2 மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள 20.14 கிலோ கிராம் போதைப்பொருட்கள் அனைத்துலக கோலாலம்ப்புர் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
விமானம் வழி பொட்டலங்களை பட்டுவாடா செய்யும் மையத்தில் இப்பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய கிழக்குக் கரை நாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அப்பொட்டலம் நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள போலி முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவிருந்ததாக சுங்கத் துறை துணை இயக்குனர் Sazali Mohamad தெரிவித்தார்.
கெத்தாமின் வகை போதைப்பொருட்களான அவை, 20 சிறிய அலுமினியம் பேப்பர்களில் சந்தேகம் வராத வகையில், பரிசோதனை கருவியிலாலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பொட்டலமிடப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
இது தொடர்பாக இதுவரை யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.