
காட்மண்டு, ஜன 18- நேப்பாள விமான விபத்தில் எவரும் உயிர் பிழைத்திருக்கும் சாத்தியமில்லை. அந்த விபத்தில் உயிர் தப்பிய எவரையும் இனி கண்டுப்பிடிக்கும் வாய்ப்பு இல்லையென்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இன்னும் கண்டுப்பிடிக்காமல் இருந்துவரும் எஞ்சிய பயணி ஒருவரின் உடலை தேடும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகினறனர். Drones எனப்படும் ஆளில்லாத விமானங்களை பயன்படுத்தி தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 72 பேருடன் பயணம் செய்த நேப்பாளத்தின் Yeti Airlines சின் ATR Turbopro விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் போக்ரா சுற்றுலா மையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. இதுவரை அவ்விமானத்தில் இருந்த 71பேரின் உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக மாவட்ட அதிகாரி Tek Bahardu K.C தெரிவித்தார்.