
புத்ரா ஜெயா, ஆக 23 – கூட்டரசு அரசாங்கத்தைச் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களும் வியாழக்கிழமைகளில் மலேசிய பாத்தேக் உடைகளை அணியும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதோடு இதர வேலை நாட்களிலும் அவர்கள் பாத்தேக் உடையை அணிவதையும் ஊக்கவிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் ஆகஸ்டு 21 ஆம்தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அது தொடர்பான அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ள பொதுச் சேவைத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ Zulkifli Mohamed தெரிவித்துள்ளார். அதே வேளையில் சீருடையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பங்கேற்கும் குறிப்பிடத்தக்க உடை நெறிமுறையை அந்த உத்தரவு உட்படுத்தாது. அரசு ஊழியர்கள் மலேசிய பாத்தே உடைகளை பயன்படுத்தும் நடைமுறை 1985ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.