
பஹாங், குவந்தானில், விரிசல் விழுந்த, அசுத்தமான உணவு தட்டுகளை பயன்படுத்திய கடைக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டதோடு, எச்சரிக்கை கடிதமும் வெளியிடப்பட்டது.
அவ்விவகாரம் தொடர்பான காணொளி வைரலானதை அடுத்து, குவந்தான் மாநகர் மன்றம் அந்த அபராதத்தை விதித்தது. அதோடு, துப்புரவு பணிகளுக்காக அந்த கடையை ஒரு மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர், மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட கடையில் விரிசல் விழுந்த உணவு தட்டுகள் அகற்றபட்டதும், அசுத்தமான தட்டுகள் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு குடும்பத்தாருடன் உணவருந்த சென்ற ஆடவர் ஒருவர் விரிசல் விழுந்த அசுத்தமான தட்டுகளை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, அது குறித்து அக்கடையின் பணியாளர்களிடமும் புகார் செய்தார்.
பின்னர் அது தொடர்பில் அவர் பதிவிட்ட 6.17 நிமிட காணொளியை, இன்று நண்பகல் வரையில் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.