சிங்கப்பூர், பிப் 23 – Foodpanda ஓட்டுநர்கள் வீடு அல்லது அலுவலகம் வரை சென்று வாடிக்கையாளரின் உணவை கொண்டு சேர்த்திருப்பதையே நாம் பார்த்திருப்போம்.
ஆனால், விரிவுரை அறை வரை சென்று, பாடம் கற்று கொண்டிருந்த மாணவிக்கு Foodpanda ஓட்டுனர் உணவு விநியோகித்த சம்பவம் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது.
டிக் டாக்கில் வைரலாகியிருக்கும் அந்த காணொளியில் , விரிவுரை அறைக்கு முன் உணவுடன் Foodpanda ஓட்டுநர் நிற்பதையும், அவருக்கு விரிவுரையாளரே , மாணவி இருக்குமிடத்தை அடையாளம் காட்டுவதையும் காண முடிகிறது.
பின்னர் அந்த மாணவி அமர்ந்திருக்கும் இடம் வரை சென்று , அந்த ஓட்டுநர் உணவை விநியோகித்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி வெட்கத்தால் தலை குனிந்ததோடு, சுற்றியுள்ள மாணவர்கள் கைதட்டியும் ஆரவாரம் செய்தனர்.
இவ்வேளையில் , அந்த Foodpanda ஓட்டுநரின் சேவைக்கு ஐந்து நட்சத்திர மதிப்பை வழங்க வேண்டுமென வலைத்தளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.