Latestஇந்தியாசினிமா

விருதுகளை வாரிக் குவித்தது சூரரைப் போற்று ; சிறந்த நடிகர் சூர்யா

புது டில்லி, ஜூலை 23 – 68-வது தேசிய திரைப்பட விருதில் , விருதுகளை குவித்து தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்திருக்கும் திரைக்கலைஞர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய சினிமா துறையில், மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதில், சூரரைப் போற்று திரைப்படம் உட்பட தமிழ் சினிமா, மொத்தம் 10 தேசிய விருதுகளை அள்ளியது .

அதையடுத்து, தம்பி சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப்போற்று படக்குழுவினருக்கும்,
இயக்குனர் வசந்த், லட்சுமி பிரியா சந்திர மவுலி, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படக்குழுவினருக்கும்,
மடோன்னே அஷ்வின், யோகி பாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் மு.க ஸ்டாலின் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் சமூக பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என்றும் அவர் வாழ்த்தியிருக்கின்றார்.

தேசிய திரைப்பட வெற்றியாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், அதில் ‘சூரரைப் போற்று’ தமிழ்ப் படம் மொத்தம் 5 விருதுகளை வாரிக் குவித்தது.

அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கின்றார் .

சிறந்த நடிகருடன், சிறந்தப் படம், சிறந்த நடிகை,சிறந்த பின்னனி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளையும் அப்படம் தட்டிச் சென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!