
கீவ் , ஜன 17- ரஷ்யாவின் நெருக்கடியை சமாளிப்பதற்கு விரைவாக ஆயுதங்களை விநியோகிக்கும்படி மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு உக்ரைய்ன் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவின் எறிபடை தாக்குதலில் Dnipro – விலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து ஆயுதங்களை அனுப்பிவைக்கும்படி மேற்கத்திய நாடுகளை உக்ரைய்ன் கேட்டுக்கொண்டது. 25 நகரங்கள் மற்றும் கிராமங்களில் ரஷ்யா ராணுவம் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தியிருப்பதாக உக்ரெய்ன் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.