Latestமலேசியா

இஸ்லாமிய விவகாரங்கள் குறித்து முஸ்லிம் அல்லாதார் இஸ்லாமிய சமய விவகார மன்றத்திடம் விளக்கம் பெற வேண்டும் – பிரதமர் அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், டிச 31 – இஸ்லாமிய விவகாரங்கள் தொடர்பில் முஸ்லிம் அல்லாதார் மலேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்துடன் தொடர்பு கொண்டு விளக்கங்களை பெறும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். இஸ்லாமிய விவகாரங்களை முஸ்லிம் அல்லாதார் மதிக்க வேண்டும் என்பதோடு அது தொடர்பான பிரச்னைகளில் தலையிடுவதிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டுமென சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா விடுத்துள்ள கோரிக்கையை தாம் முழுமையாக ஆதரிப்பதாக அன்வார் தெரிவித்தார். அதே வேளையில் ஏதாவது குழப்பம் இருந்தால் முஸ்லிம் அல்லாதார்கள் மலேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்துடன் தொடர்பு கொண்டு நல்லெண்ண மற்றும் நாகரீகமான முறையில் விவகாரத்திற்கு தீர்வு காணலாம் என அவர் கூறினார்.

இஸ்லாமிய விவகாரங்களில் தலையிடுவதிலிருந்து முஸ்லிம் அல்லாதார் விலகியிருக்க வேண்டும் என வெள்ளிக்கிழமையன்று சிலாங்கூர் அரச அலுவலக முகநூலில் சுல்தான் ஷராபுடின் பதிவேற்றம் செய்திருந்தார். ஷரியா நீதிமன்றங்களின் பங்கை வலுப்படுத்தும் ஆலோசனையை ஆராய்வதற்கான சிறப்பு குழுவில் முஸ்லிம் அல்லாத நிபுணர்கள் இடம்பெற வேண்டும் என DAP Beruas நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாம் அண்மையில் கூறிருந்த ஆலோசனை தொடர்பில் சிலாங்கூர் சுல்தான் கருத்துரைத்தார். இஸ்லாமிய விவகாரங்களில் குறிப்பாக முஸ்லிம் அல்லாத அரசியல்வாதிகள் கருத்துரைக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென மலேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் தலைவருமான ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!