கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – தமிழ்மொழியில் மேற்கல்வியைக் கற்க வேண்டுமெனில் மாணவர்கள் மலாயா பல்கலைக்கழகத்திற்கும், உப்சி பல்கலைக்கழகத்திற்கும் செல்லும் வாய்ப்பு மட்டுமே தற்போது உள்ளது.
இந்நிலையை விரிவுப்படுத்தி மாணவர்களுக்கு இன்னும் அதிகமான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் விரைவில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பிரிவை ஏற்படுத்த முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ம.இ.கா துணைதலைவரும் ஏய்ம்ஸ்ட்-டின் இணை வேந்தருமான டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார் .
சிலாங்கூர் ம.இ.கா பேராளர் மாநாட்டின் அவர் இதனை அறிவித்தார்
இந்திய மாணவர்களின் கல்விக்காக நிதி வழங்கி உதவும் ஒரே கட்சி என்றால் அது ம.இ.காவின் MIED என்பதையும் வலியுறுத்தி நினைவுபடுத்தினார் சரவணன்.
இதனிடையே இன்றைக்கு இந்தியச் சமுதாயம், குடும்பத்தில் ஒரு பட்டதாரி எனும் நிலையைத் தாண்டி, ஒவ்வொரு குடும்பத்திலும் நிபுணர்களை உருவாக்கும் இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அவர்களுக்குக் தொடர்ந்து கை கொடுக்கும் இடத்தில் நாம் இருக்கிறோம் என்பதைப் புரிய வைத்து கட்சியை மேலும் வலுப்படுத்துவோம் என்று சரவணன் கூறினார்.