
- 15-வது பொதுத் தேர்தலில் தாம் வென்ற பேராக் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதிக்கு குறுகிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
அந்த பயணத்தின் போது சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கும் அவர் , இன்று நண்பகல் Tanjong Rambutan பொது சந்தைக்கு திடீர் வருகை மேற்கொண்டு அப்பகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தார்.
முன்னதாக அவர் இன்று காலை மணி 10.50 அளவில் இஸ்தானா கிந்தாவில் பேராக் சுல்தான் Sultan Nazrin Shah -வை மரியாதை நிமித்தம் சென்று கண்டார்.
- Sungai Perak ஆற்றின் நீர் வளம், பேராக் -பினாங்கு இரு மாநிலங்களின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடுமென , அண்மையில் முழுமைப் பெற்ற சுற்றுச் சூழல் நீர் வள அமைச்சின் ஆய்வு காட்டுவதாக பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார். அந்த புதிய ஆய்வின் அடிப்படையில், நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் , பேராக் ஆற்றிலிருந்து பினாங்கிற்கு சுத்திகரிக்கப்படாத நீரை விநியோகிக்கும் திட்டம் தொடர்பில் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்படுமென அவர் கூறினார். முன்னதாக, பேராக் மெந்திரி பெசார் Datuk Seri Saarani Mohamad, பினாங்கிற்கு சுத்திகரிக்கப்படாத நீரை விநியோப்பதில்லை என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லையென கூறியிருந்தார்.
- பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி, பகாங் தியோமான் சட்டமன்றத் தொகுதி ஆகிய இரு தொகுதிகளுக்கான தேர்தலில், நாளை போலீஸ் அதிகாரிகள் முன்கூட்டியே வாக்களிக்க விருக்கின்றனர்.
பாடாங் செராய் தொகுதிக்கான வாக்களிப்பு மையம் கூலிம் மாவட்ட போலீஸ் தலைமையக மண்டபத்தில் திறக்கப்படும் வேளை, தியோமான் தொகுதிக்கான வாக்களிப்பு மையம் ரொம்பின் போலீஸ் தலைமையகத்தில் திறக்கப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பாடாங் செராய் தொகுதியில் 76 போலிஸ் அதிகாரிகளும், தியோமான் தொகுதியில் 243 போலீஸ் அதிகாரிகளும் முன்கூட்டியே வாக்களிக்கின்றனர்.
- பியோங்யாங்கின் அண்மைய ஏவுகணை சோதனைகளை அடுத்து, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா முதலிய நாடுகள் வட கொரியா மீது புதிய தடைகளை விதித்துள்ளன.
- போலிவூட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், மெக்காவில் உம்ரா யாத்திரையை மேற்கொண்டிருக்கும் புகைப் படங்களும், காணொளிகளும் வெளியாகியுள்ளன.
சவூதி அரேபியாவில், Dunki திரைப்படத்துக்கான படப்பிடிப்பை முடித்துக் கொண்டு 57 வயதான ஷாருக்கான் குறுகிய உம்ரா யாத்திரையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.