
கோப்பேங் , ஜன 3 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் கோப்பேங்கிற்கு அருகே
292 .7 – ஆவது கிலோமீட்டரில் விரைவு பஸ் ஒன்று கவிழ்ந்ததில் இரண்டு நபர்கள் காயம் அடைந்தனர். பஸ் ஓட்டுநரும் அந்த பஸ்ஸில் இருந்த பெண் பயணியும் காயம் அடைந்தனர். இன்று விடியற்காலை மணி 5.41 அளவில் அந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நிகழ்ந்தபோது அந்த பஸ்ஸில் மூவர் மட்டுமே இருந்தனர். மற்றொரு பயணி காயம் அடையவில்லை.