
லீப்பிஸ், செப் 20 – விரைவு பஸ் ஒன்று கவிழ்ந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த பயணிகளில் மூவர் மரணம் அடைந்தனர். கோலாலம்பூரை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த அந்த விரைவு பஸ் Lipis , Merapoh, Kampung Kubang Rusa வில் ஒரு வளைவில் கவிழ்ந்த பின்னர் அருகேயுள்ள மரத்தில் மோதியது. அந்த விபத்தில் 56 வயதுடைய பஸ் ஓட்டுனர் Abdul Aziz Daud, தீயணைப்பு வீரரான 55 வயதுடைய பயணி Mohd Syukri Mat Noor மற்றும் வங்காளதேச பிரஜையான 41 வயது Hossain Kamal ஆகியோர் மரணம் அடைந்தனர். அந்த விபத்தின்போது இரண்டு அடுக்குகளைக் கொண்ட Lienadia Express பஸ்ஸில் 18 பயணிகளும் இரண்டு ஓட்டுனர்களும் இருந்தனர். இன்று அதிகாலை மணி 1.55 அளவில் Kelantan, Kuala Krai யிலிருந்து கோலாலம்பூருக்கான சேவையில் ஈடுபட்டிருந்தபோது அந்த பஸ் விபத்துக்குள்ளானதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பகாங் மாநில துணை இயக்குனர் இஸ்மாயில் அப்துல் கனி தெரிவித்தார்.