கோத்தா பாரு, பிப் 2 – கிளந்தான் தும்பாட்டிலிருந்து ஜோகூர் பாருவிற்கு சென்று கொண்டிருந்த விரைவு ரயிலின் இயந்திரப் பகுதி, பாசிர் மாஸ் அருகேயுள்ள கம்போன் அனாக் மாச்சாங் பகுதியில் தீப்பற்றிக் கொண்டது.
நேற்றிரவு மணி 9.44 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தின் போது, ரயிலில் 180 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் எந்தவித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டதாக பாசிர் மாஸ் தீயணைப்பு துணை அமலாக்க அதிகாரி ஷாபாவி செதாபா தெரிவித்தார்.