Latestஉலகம்

விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தின் இயந்திரத்தில் தீ ; நியூசிலாந்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது

வெலிங்டன், ஜூன் 18 – இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக, விர்ஜின் ஆஸ்திரேலியா பயணிகள் விமானம் ஒன்று, நேற்று நியூசிலாந்து விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

67 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன், ஆஸ்திரேலியா, மெல்போர்னுக்கு (Melbourne) பயணமான, விர்ஜின் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் போயிங் 737-800 ரக ஜெட் விமானத்தின் இயந்திரங்களில் ஒன்று, தீ காரணமாக செயலிழந்தது.

அதனால், அவ்விமானம், நியூசிலாந்து, இன்வர்கார்கில் (Invercargill) நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

பறவை கூட்டம் மோதியதில், விமானத்தின் இயந்திரத்தில் தீ ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

குயின்ஸ்டவுன் (Queenstown) விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிழம்புகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும், இன்று மாற்று விமானம் வாயிலாக பயணத்தை தொடர்ந்தனர்.

விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கிய, நியூசிலாந்து விமான நிலைய நிர்வாகத்துல்கு, விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!