Latestமலேசியா

விற்பனைக்கு வந்திருக்கும் TM கோபுரம்

கோலாலம்பூர், பிப் 9 – கேஎல் சென்ட்ரல் – பங்சார் பொருளாதார பெருவழித் திட்ட மையப் பகுதியில் அமைந்திருக்கும் டெலிகோம் மலேசியாவின், TM கோபுரம் விற்பனைக்கு வந்துள்ளது. உள்நாட்டு ஆங்கில நாளேட்டில் , இன்று அதன் தொடர்பான விற்பனை விளம்பரம் இடம்பெற்றுள்ளது.

55 மாடிகள் கொண்ட TM கோபுரம், தலைநகரின் முக்கிய அடையாளச் சின்னமாக விளங்குகிறது. அதன் விலை குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், மார்ச் 18-ஆம் தேதி மதியம் மணி 12- டுடன் முதற்கட்ட விற்பனை முடிவுக்கு வருமென அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2001-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட அந்த கோபுரம் ஹெலிகப்டர் தரையிறங்கும் வசதியைக் கொண்டுள்ளது. அலுவலங்களுடன், மாநாட்டு மையம், பல்நோக்கு மண்டபம், விளையாட்டுத் தளம், கிளினிக், சிறார் பராமாரிப்பு மையங்கள் ஆகியவை உள்ளன.

அத்துடன் , 66 கோடியே 93 லட்சம் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட அந்த கட்டடம், 1,700 கார்கள் நிறுத்துவதற்கான இடவசதியையும் கொண்டுள்ளது. அருகில் கெரிஞ்சி ( Kerinchi ), யுனிவெர்சிட்டி (Universiti) LRT நிலையங்கள் போன்ற பொது போக்குவரத்து வசதியும் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!