லெய்செஸ்டர்ஷைர், மார்ச் 3 – பிரிட்டன், லெய்செஸ்டர்ஷைரில் (Leicestershire ) ஒரு வகை விலங்கினம் வாழும் வளைக்குள் சிக்கிக் கொண்ட நாய் ஒன்று இரு தினங்களுக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டது.
Badger எனப்படும் வளைக்கரடி வாழும் மண்குழிகளைத் தொந்தரவு செய்வது பிரிட்டனில் சட்டப்படி குற்றமாகும். அதனால் அந்த குழியைத் தோண்ட இயற்கை வளத் துறையிடமிருந்து உரிமையாளர் அனுமதி பெற்றப் பின்னரே , தீயணைப்பு படையினரின் உதவியுடன் அந்த நாய் காப்பாற்றப்பட்டது.