
கோலாலம்பூர், செப் 26 – விலைவாசி உயர்வு மற்றும் அரிசி போன்ற சில பொருட்களின் பற்றாக்குறையை குறைக்க குறுகிய கால திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் Ismail Sabri Yaakob அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார். இந்த பிரச்சினைகளில் மக்கள் கோபமாக இருப்பதால்,உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார். தாம் பிரதமராக இருந்தபோது கோழியின் விலை உயர்ந்தபோது , சிங்கப்பூருக்கு கோழி இறைச்சி ஏற்றுமதியை நிறுத்தியதோடு அதன் இறக்குமதிக்கு பல நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது உட்பட விவேகமான செயல் திட்டம் எடுக்கப்பட்டதை இஸ்மாயில் சப்ரி சுட்டிக்காட்டினார்.
அதேபோல், விலைவாசி உயர்வு மற்றும் பொருட்களின் விநியோக பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் குறுகிய கால நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். பக்காத்தான் ஹராப்பானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன், சமமான நிதி இல்லாவிட்டாலும், எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு தனது நிர்வாகம் ஒதுக்கீடுகளை வழங்கியதாகவும் இஸ்மாயில் கூறினார்.