Latestஉலகம்

விலை உயர்ந்த காரையும், தொலைக்காட்சியையும் வாங்க வேண்டாம் ; மக்களுக்கு அறிவுறுத்தல்

அமெரிக்கா , நவ 17-அமெரிக்கர்கள் அடுத்தாண்டு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம்.

அதனால், விலை உயர்ந்த கார், தொலைக்காட்சி போன்றவற்றை வாங்க வேண்டாம் என, உலகின் மிகப் பெரிய கோடிஸ்வரர்கள் வரிசையில் நான்காவது இடத்தை பிடித்துள்ள Jeff Bezos வலிறுத்தினார்.

ஆபத்து அவசர காலங்களில் பயன்படுத்த மக்கள் பணத்தை சேமித்து வைக்க வேண்டும்.

அதுவே, பொருளாதார மந்த நிலைக் காலத்திலும், தம்மால் தொடர்ந்து செயல்பட முடிவதற்கான முதன்மை காரணம் என, Amazon இணைய விற்பனை நிறுவனத்தின் தோற்றுனருமான Jeff Bezos சொன்னார்.

அதனால், பெரிய அளவில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பணத்தை செலவிடுவதை ஒத்தி வைத்து விட்டு, மக்கள் பணத்தை சேமித்து வைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

இம்முறை எவ்வளவு நாள் பொருளாதார மந்த நிலை நீடிக்கும் என்பதை தம்மால் சரியான கணிக்க முடியவில்லை என கூறிய Jeff Bezos, ஆனால் கூடிய விரையில் அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்றார்.

இதற்கு முன், Amazon நிறுவனத்தின் ஒன்பதாயிரம் பணியாளர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். Amazon தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து, அந்நிறுவனத்தில் மிகப் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவில், அனைத்துலக சில்லறை விற்பனை நிறுவனமான Walmart-டை அடுத்து இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக Amazon திகழ்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!