Latestமலேசியா

விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்துவீர் – அம்னோ வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 26 – மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் அளவிற்கு காய்கறிகள் உட்பட பொருட்களின் விலை உயர்வு கண்டுள்ளதால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்னோ துணைத்தலைவர் Mohamad Hassan கேட்டுக்கொண்டார். கடந்த சில நாட்களாக காய்கறி விலைகள் இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டதால் மக்கள் குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் பெரும் கவலை அடைந்துள்ளனர். கோழி இறைச்சி , முட்டை , சமையல் எண்ணெய் போன்றவை ஒட்டுமொத்தமாக விலையேற்றம் கண்டுள்ளது. ஆண்டுதோறும் ஆண்டு வாழ்க்கை செலவினம் உயர்ந்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக Mohammad Hassan சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!