
தும்பாட் , பிப் 6 – போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மின் கம்பத்தில் மோதிய விபத்துக்குள்ளானதில் அவர் மரணம் அடைந்தார். Wakaf Bharu விலிருந்து Kampung Terbak கிலுள்ள தமது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தும்பாட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் 29 வயதுடைய இன்ஸ்பெக்டர் அந்த விபத்தில் மரணம் அடைந்ததை கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ Muhamad Zaki Harun உறுதிப்படுத்தினார். அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததைத் தொடர்ந்து விளக்கு கம்பத்தில் மோதியது. ஓட்டுனர் இருக்கையில் சிக்கிக்கொண்ட அவர் தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் உயிரிழந்ததாக Muhamad Zaki தெரிவித்தார்.