Latestமலேசியா

ஈப்போ கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் இந்திய விரிவுரையாளர்களை கொண்டாடும் நிகழ்வு

கோலாலம்பூர், டிச 7 – நம் நாட்டில் தமிழ்ப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை உருவாக்கிய பெருமை நாட்டிலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளைச் சாரும் என்பதை மறுக்கமுடியாது.

கடந்த காலங்களில் நாட்டிலுள்ள பல ஆசிரியர் கல்லூரிகளில் பள்ளி விடுமுறை காலத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன. அப்படி பயிற்சி பெற்ற எண்ணற்ற ஆசிரியர்கள் இன்றும் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் ஈப்போவிலுள்ள கிந்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 1989ஆம் ஆண்டு முதல் கற்பித்த இந்திய விரிவுரையாளர்களை கொண்டாடும் வகையில் அந்த கல்லூரியில் 1989 முதல் முதல் 1997ஆம் ஆண்டு வரை பயின்ற அனைத்து பயிற்சி ஆசிரியர்களும் தங்களது விரிவுரையாளர்களை கொண்டாடுவோம் என்ற நிகழ்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி ஈப்போவிலுள்ள டவர் ரீஜென்சி & ஹோட்டலில் காலை 9 மணி முதல் மாலை மணி 4.00 வரை நடைபெறவிருப்பதாக கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற முன்னாள் ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஏ . கே .கிருஷ்ணன் தெரிவித்தார்.

கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பங்காற்றிய முன்னாள் விரிவுரையாளர்களை கௌரவிக்கும் வகையில் மிகவும் சிறப்பாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் பயிற்சி ஆசிரியர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் கதிரவன் அர்ஜூனன் மற்றும் கௌரவ செயலாளர் ராமன் சிலம்பு செல்வன் தெரிவித்தனர்.

விரிவுரையாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் பயிற்சி ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!