சோஃபியா, பிப் 28 – பொதுவாகவே எதிர்காலத்தை தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆவல் இருக்கும். அதுவும் உக்ரேன் மீதான படையெடுப்பை உலகமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்குமென தெரிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கு இருக்கும்.
அவ்வகையில், அமெரிக்காவுக்கு எதிரான 9/11 தீவிரவாத தாக்குதல், Brexit எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய நிகழ்வு போன்ற முக்கிய சம்பவங்களை கணித்தவரான Baba vanga, இறப்பதற்கு முன்பு ரஷ்யா குறித்து என்ன கணித்திருக்கின்றார் என்று பார்ப்போமே.
எதிர்காலத்தை சரியாக குறித்து சொல்லும் பல்கேரியாவைச் சேர்ந்த கண் பார்வையற்ற Baba vanga தமது 85-வயதில் இறப்பதற்கு முன்பாக, Daily Mail ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில், உலகின் அதிபதியாக ரஷ்யா உருவெடுக்குமென கணித்திருந்தார். எது நடந்தாலும் ரஷ்யாவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது எனக் கூறியுள்ளார்.