
கோலாலம்பூர், நவ 21 – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு மையங்களிலும் சிகரெட் மற்றும் வெப் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டரங்கள் உட்பட விளையாட்டு நடைபெறும் இடங்களிலும் மின் சிகரரெட்டுகளை புகைக்க முடியாது. இம்மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக்கு பிந்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ் தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு புகையிலை உற்பத்தி கட்டுப்பாட்டு விதிமுறை மற்றும் திருத்தம் செய்யப்பட்ட 2008ஆம் ஆண்டின் புகையிலை கட்டுப்பாட்டு விதிமுறை ஆகிய அம்சங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார். ஒட்டுமொத்தமாகவே வெப் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக 2024ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து பேசியபோது ஹன்னா யோவ் தெரிவித்தார்.