Latestமலேசியாவிளையாட்டு
விளையாட்டாளரைக் குறை கூறியதால் , வர்ணனையாளருக்கு மிரட்டல் !

ஷா ஆலாம், செப் 1 – விளையாட்டாளரின் அடைவுநிலை குறித்து குறை கூறியதால், விளையாட்டு வர்ணனையாளருக்கு, ரசிகர் ஒருவரிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்யும் அந்த வர்ணனையாளர், அண்மைய காலமாக சரிந்து வரும் தேசிய ஒற்றையர் பூப்பந்து விளையாட்டாளர் Lee Zhi Jia – வின் அடைவுநிலை குறித்து பேசியிருந்ததாக நம்பப்படுகிறது .
அதையடுத்து, விளையாட்டாளர்கள் பற்றி மோசமாக பேசினால், தாக்கப்படுவாய் என கூறி அவருக்கு , இன்ஸ்தாகிராமில் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டது .
அதை தொடர்ந்து, அந்த மிரட்டல் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தலாக அமையுக் கூடுமென கூறி, அந்த வர்ணனையாளர் போலீஸ் புகார் செய்திருப்பதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.