Latestமலேசியா

டாக்டர் ஞானபாஸ்கரனின் வரலாறு கண்ட சகாப்தம் எனும் நூல், வெளியீடு கண்டது

கோலாலம்பூர், ஏப்ரல் 4 – மலேசிய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் ஞானபாஸ்கரன், ‘வரலாறு கண்ட சகாப்தம்: 3 தலைமுறையின் பயணம்’ எனும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியீடு செய்தார்.

சுமார் 112 ஆண்டு கால குடும்ப வரலாற்றையும் நிகழ்வுகளையும் சித்தரிக்கும் அப்புத்தகம் தமிழ், ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் ஒருசேர வெளியீடு கண்டது.

மலையக நாட்டில் வாழ்ந்ததையும், இந்த நாட்டுக்காகச் செய்த தியாகத்தையும் ஒவ்வொரு இந்தியனும் ஆவணப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தவே இந்த சுய வரலாற்று நூலை எழுதியதாக வணக்கம் மலேசியவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நூல் விற்பனை வாயிலாகக் கிடைக்கும் தொகை, நல்லதொரு நோக்கத்திற்காக வழங்கப்படும் எனக் கூறினார்.

நேற்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில் விமரிசையாக நடந்தேறிய வரலாறு கண்ட சகாப்தம் நூல் வெளியிட்டில் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, சுகாதார முன்னாள் அமைச்சரும் மஇகாவின் 9-வது தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், மூத்த அரசியல் தலைவர்கள் Lim Kit Siang, தான்ஸ்ரீ குமரன் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!