Latestமலேசியா

விளையாட்டாளர்களை அறைந்த பயிற்றுநரின் லைசென்ஸ் ரத்து

புத்ராஜெயா, ஜன 12 – தனது இரு மாணவிகளை அறைந்த Volleyball -கைப்பந்து பயிற்றுநர் , இனி பயிற்றுநராக செயல்பட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
பயிற்றுநருக்கான அவரது அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதோடு பள்ளிக்கூட மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ ( Hannah Yeoh )தெரிவித்தார்.

முழு விசாரணைக்கு பின்னர், தேசிய விளையாட்டு மன்றமும், மலேசிய கைப்பந்து சங்கமும் அந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே, விளையாட்டாளர்களின் பாதுகாப்பிலும் நலனிலும் அமைச்சு எப்போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது. குறிப்பாக , வயது குறைந்த அதுவும் பள்ளிக் கூட மாணவர்களை உட்படுத்திய விவகாரத்தை அமைச்சு கடுமையாக கருதுவதாக அமைச்சர் கூறினார்.

அண்மையில், 44 வயது Saiful Hadee Amar, போட்டியின்போது குறைந்த மதிப்பெண்களைப் பெற்றதற்காக இரு மாணவிகளை அறைந்த காணொளி வைரலானதை அடுத்து , அந்த பயிற்றுநர் பொதுவில் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!