Latestமலேசியா

விவாகரத்து செய்யப் போவதாக கூறியதால் வந்த வினை ; கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி கைது

இந்தேனேசியா, ஜகார்த்தாவிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றில், உறங்கிக் கொண்டிருந்த கணவரின் அந்தரங்க உறுப்பை மனைவி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது திருமணத்தை குடும்பத்தார் ஏற்றுக் கொள்ளாததால் விவாகரத்து செய்யப் போவதாக கூறிய கணவன் மீது சினமடைந்த மனைவி, நேற்று அதிகாலை மணி 4.30 வாக்கில், முதலில் அவனது ஆணுறுப்பை காயப்படுத்தி பின்னர் வெட்டியதாக கூறப்படுகிறது.

தூக்கத்திலிருந்து எழுந்த அந்த ஆடவன், தங்கும் விடுதி பணியாளர்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பில், தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்த வேளை ; அப்பெண் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!