Latestமலேசியா

வீடமைப்புப் பகுதியில் அபாயரகமாக கார் ஓட்டும் பெண்ணின் காணொளி வைரல்

தம்பின், டிச 6- குடும்ப பிரச்சனையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 28 வயதுடைய பெண் ஒருவர் வீடமைப்பு பகுதியில் அபாயகரமாக கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டார்.

தம்பின் தாமான் இன்டா வீடமைப்பு பகுதியில் நடந்த அந்த சம்பவம் குறித்த காணொளி காட்சி வைரலானது. காலை 11 மணியளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வீடமைப்பு பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட போலீஸ் குழுவினர் மைவி காரை ஓட்டிய அப்பெண்ணை கைது செய்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்பிரடண்ட் அமிருடின் சரிமான் தெரிவித்தார்.

நல்ல வேளையாக இந்த பெண் எவரையும் மோதவில்லை என் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!