
சிரம்பானில் ,நவ 3 – சிரம்பான் நகரான்மைக் கழகத்திற்கு உட்பட்ட வீடமைப்பு பகுதிகளில் குடியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியேறி வர்த்தக பகுதிகளில் குடியேற வேண்டும் என சிரம்பான் மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. வீடமைப்பு பகுதிகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருவதாக குடியிருப்புவாசிகளிடமிருந்து நிறைய புகார்களை பெற்றுவருவதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிரம்பான் டத்தோ பண்டார் டத்தோ மஸ்ரி ரசாலி தெரிவித்துள்ளார்.
வர்த்தக பகுதியிலுள்ள கடை வீடுகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தற்காலிகமாக தங்குவதை அரசாங்கம் ஊக்குவித்து வருவதாக அவர் கூறினார். எனினும் தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தப்படும் தங்கும் விடுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் நீண்ட கால அடிப்படையில் தங்க வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.