Latestமலேசியா

வீடமைப்பு பகுதியில் யானைகள் அட்டகாசம் காணொளி வைரலானது

குளுவாங், ஏப் 30 – குளுவாங் Taman Sril Lambak கில் ஒரு வீட்டின் நுழைவாயிலில் யானைகள் ஊடுருவிய சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த யானைகள் இரண்டாவது முறையாக ஒரு வீட்டின் வேலியை உடைத்துள்ளன. இச்சம்பவம் அவ்வீட்டிலுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு நிமிடம் கொண்ட அந்த காணொளியை @budakkulang என்பவரின் Tik Tik கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் யானைகள் அங்குள்ள வீடமைப்பு பகுதியிலுள்ள வீடுகளுக்கு விஜயம் செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டதாக அந்த டிக்டோக் பயனர் தெரிவித்துள்ளார். மனிதர்களின் நடவடிக்கையால் மிருகங்களின் வாழ்வுதார பகுதிக்கு ஏற்படுத்தப்படும் அழிவுகளால் யானை போன்ற மிருகங்கள் தற்போது உணவை தேடி பல இடங்களில் அவதிப்படுவது குறித்து பல நெட்டிசன்கள் தங்ளது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!