
மெக்சிக்கோ சிட்டி , ஜன 19 வீடியோ விளையாட்டில் ஏற்பட்ட தகராறினால் 10 வயது சிறுவன் ஒருவன் சுட்டதால் மற்றொரு 11 வயது பையன் உயிரிழந்தான். மெக்சிக்கோவின் கிழக்கு பகுதியிலுள்ள விராகுருஸ் என்ற மாநிலத்தில் அந்த துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. வீடியோ விளையாட்டின்போது திடீரென ஏற்பட்ட தகராறினால் ஆத்திரமடைந்த அந்ந சிறுவன் உடனடியாக தனது வீட்டிற்குள் சென்று துப்பாக்கியை எடுத்துவந்து மற்றொரு பையனின் தலையில் சுட்டான். இச்சம்பவத்திற்குப் பின் துப்பாக்கி சூடு நடத்திய சிறுவனும் அவனது குடும்பத்தினரும் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.