
கிள்ளான், டிச 3 – போர்ட் கிள்ளான், Tanjung Harapanனில் கடலோரத்திற் அருகே இருந்த வீடு இடிந்ததில் அதில் இருந்த ஒரு பெண்ணும் அவரது மகளும் உயிர் தப்பினர். இரவு 10 மணியளவில் அந்த சம்பவம் நிகழ்ந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் சிலாங்கூர் மாநில இயக்குனர் Norazam Khamis தெரிவித்தார். நீரில் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் தூண் உடைந்ததைத் தொடர்ந்து அவ்வீடு இடிந்தது. அவ்வீட்டில் 46 வயது பெண்ணும் அவரது 25 வயது மகளும் தங்கியிருந்தனர். பொதுமக்களின் உதவியோடு ஒருவர் மீட்கப்பட்ட வேளையில் மற்றொருவர் இடிந்த கட்டைகளின் இடிபாடுகளிலிருந்து தீயணைப்புப்பு படை வீரர்களால் மீட்கப்பட்டார். காயம் அடைந்த அவர்கள் இருவரும் கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.