ஜோர்ஜ் டவுன், ஜன 6 – வீடு இல்லாத ஆடவரின் சடலம் கம்போங் ராவாவிற்கு அருகேயுள்ள ஆற்றில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பிற்பகல் மணி 1.30 அளவில் பொதுமக்கள் போலீசிற்கு தகவல் கொடுத்ததாக பினாங்கு வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
உள்ளூரைச் சேர்ந்த 72 வயதுடைய அந்த ஆடவர் பொதுவாகவே கம்போங் ராவாவிற்கு அருகே இருந்து வந்தவர் என்றும் அவரது மரணத்தில் குற்ற அம்சம் எதுவும் இல்லையென தெரியவந்ததாக Abdul Rozak கூறினார்.
அந்த ஆடவரின் மரணத்திற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக அவரது உடல் சவப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனையின் தடயயில் துறைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அப்துல் ரசாக் தெரிவித்தார்.