
பஹாங், பெந்தோங்கில், வீடு ஒன்று தீக்கிரையானதில் முதியவர் கருகி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 65 வயது முஹமட் யூசோப் இட்ரிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
90 விழுக்காடு தீக்கிரையான அவ்வீட்டில் தனியாக தங்கி இருந்த அம்முதியவரின் உடல் ஜன்னல் ஓரத்திலிருந்து மீட்கப்பட்டது.
அந்த தீ விபத்து குறித்து இரவு மணி 9.02 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததாக, பஹாங் மாநில தீயணைப்பு மீட்புப் படையின் உதவி இயக்குனர் இஸ்மாயில் அப்துல் கானி தெரிவித்தார்.